உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், இலங்கையில் தங்கத்தின் விலை அதியுச்ச அதிகரிப்பை பதிவு செய்துள்ளது
டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதென அகில இலங்கை நகை கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, செட்டியார் தெருவில் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 150, 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை, 141, 625 ரூபாவாக காணப்படுகிறதென அந்த சங்கம் தெரிவித்துள்ளது.