தேறியோரின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது

0
732

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நேற்று மேலும் 916 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 58,075 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.