இறந்த தாயின் உடலை 10 ஆண்டுகள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருத்த பெண் கைது

0
495
Man Arrested Drug Found Sri Lanka Tamil News

டோக்கியோவில் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில், பத்தாண்டுகளுக்கும் மேலாக தன் தாயின் உடலை மறைத்து வைத்துள்ளார் 48 வயதாகும் யூமி யோஷினோ என்ற பெண்மணி.

யூமி யோஷினோவும், அவரின் தாயாரும் வசித்து வந்த அந்த குடியிருப்பில் இருந்து யூமி வெளியேற விரும்பாததால் தனது தாயின் உடலை பத்தாண்டுகளாக மறைத்து வைத்திருந்தார் என்று காவல்துறை தகவல்கள் தெரிவிப்பதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உறைந்த நிலையில் இருக்கும் இறந்த உடலில் எந்தவிதமான காயங்களும் தென்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் இறந்த நேரம் மற்றும் இறந்ததற்கான காரணம் ஆகியவற்றை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. டோக்கியோ அருகே உள்ள சைபா எனும் நகரத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) யூமி கைது செய்யப்பட்டார்.