காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்

0
498

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடக அமைப்புகள் இணைந்து நடத்தின. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பு ஆர்ப்பாட்டமானது காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளரகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.