தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை

0
400

கொரோனா தொற்று தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி முதல் 12 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டது. இடையிடையே பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. 12வது கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார்.

காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பதை விரிவாக கேட்டு அறிகிறார். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழகத்திலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகளை அளிப்பது குறித்தும் இன்று முடிவு செய்யப்பட இருக்கிறது.