யாழில் சீரான எரிபொருள் விநியோகம்

0
22

யாழ் குடாநாட்டில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றையதினம் காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான பொறிமுறை ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.

அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொழும்பில் இருந்து எடுத்து வருதல் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லுதல், விவசாயம் மீன்பிடி போன்ற அத்தியாவசிய தேவைப்பாடுகளுக்கு எரிபொருள் சீராக விநியோகத்தினை வழங்குதல் தொடர்பாகவும், மேலதிக எரிபொருள் விநியோகம் தொடர்பாக உரிய மேலதிக வழிகாட்டுதல்களைப் பெற்று வழங்குவது தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.