தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர். பெண் விரிவுரையாளரின் இறுதி கிரியைகளின் போது அவரது மகள் கலந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இலங்கையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகள் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டது சரியா பிழையா என்பது போன்ற விவாதங்கள் எழுந்துள்ளன.




