விபத்தில் இருந்து தப்பிய எயார் இந்தியா விமானம்; 133 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

0
35

தாய்லாந்தில் எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து புக்கெட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 938), தாய்லாந்தின் புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ‘ஹார்ட் லேண்டிங்’ (hard landing) காரணமாக மூக்குப் பகுதி சக்கரம் (nose wheel) சேதமடைந்து விபத்துக்குள்ளானது.

133 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தாய்லாந்து, புக்கெட் விமான நிலையத்தில் எயார் இந்தியா விமானம் தரையிறங்கிய போது பலமாக மோதுண்டதன் காரணமாக விமானத்தின் முன் சக்கரம் கழன்றுள்ளது.

சம்பவத்தின் போது, விமானத்தில் 133 பேர் இருந்துள்ள நிலையில் பயணிஅக்ள் , 133 பேரும் நூலிழையில் உயிர்தப்பினர். புக்கெட் விமான நிலையத்தில் புதன்கிழமையன்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 MAX ரக விமானம் ஒன்று, தரையிறங்கும்போது பலமாக மோதியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வகையில் தரையிறங்கியது.

இதனால் அவ்விமானத்தின் முன்பக்கச் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்தன என்று DGCA-வின் (சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். VT-BWQ என்ற பதிவு எண் கொண்ட அந்த விமானம், ஹைதராபாத்திலிருந்து புக்கெட்டிற்குச் செல்லும் IX938 என்ற விமானச் சேவையை இயக்கியது.

விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு விமான நிலைய முனையக் கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.