ஈரானின் புதிய உச்ச தலைவர் நியமனம்

0
26

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி, நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts) இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானிய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் உறுப்பினர்களின் பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அரசியல் உயர்வட்டத்தில் மொஜ்தபா கமெனி என்ற பெயர் பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இது சாத்தியமா இல்லையா என்ற விவாதமும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும். ராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்த தலைமையும் இல்லாதபோது தான் போர் முடிவடையும். அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதில் நான் ஈடுபட விரும்புகிறேன் என ட்ரம்ப் எச்சரித்திருந்தமை குறிப்பிடதக்கது.