அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சீனா நேற்று அறிவித்துள்ளது.
“அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரை பேச்சு மூலம் நிறுத்தலாம். போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்கலாம்.
இதற்காக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா தயாராக உள்ளது என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார். அதேவேளை மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் சீன ஜனாதிபதி தொலைபேசி மூலம் உரையாடி வருகின்றார்.



