டொனால்ட் ட்ரம்ப் வரி விவகாரம்; அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவு

0
26

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ட்ரம்ப் சர்வதேச அவசர கால பொருளாதார சட்டத்தின் கீழ் விதித்த நாடுகளுக்கு வரி விதித்திருந்தார்.

அவரின் வரி விதிப்பின்படி, அமெரிக்காவுக்கு உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் செலுத்துமாறு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டொலர் வரிப்பணத்தை மீண்டும் திருப்பி அளிக்குமாறு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அந்த நாட்டு சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.