யாழில் வீதியில் வீசப்பட்ட 6 மாத கரு!

0
26

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கருவை வீசி சென்ற சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவம்    தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ். நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார்.

அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண் எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற யாழ். நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கருவை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார்.