டிட்வா பாதிப்பு – கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா

0
22

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த சந்திப்புகளின் போது, ​ இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் மீள்தன்மை கொண்டவொரு எதிர்காலத்தை உருவாக்க உதவுவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.