19 நாட்களுக்கு இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை!

0
27

2026 ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் உட்பட பொது விடுமுறை நாட்களுடன் மொத்தம் 19 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மது வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த 19 நாட்களில் 12 பௌர்ணமி தினங்கள், சுதந்திர தினம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாட்கள் உலக மது ஒழிப்பு தினம் மற்றும் நத்தார் தினம் ஆகியவை அடங்கும். விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.