இலங்கையில் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம்

0
25

இலங்கையில் குரங்குகளுக்கான முதலாவது தடுப்பு முகாம் மாத்தளை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. மாத்தளை நகரில் பொது மக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூராகவும் தொல்லையாகவும் அமையும் குரங்குகள் புதிய முகாமுக்கு மாற்றப்படவுள்ளன.

இந்த திட்டம் முன்னோடி நடவடிக்கையாகவும் ஆய்வு நோக்கில் அமைந்ததாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை இலங்கையில் பல பகுதிகளில் விவசாய விலைப் பொருட்களுக்கும் வீடுகளுக்கும் குரங்குகளினால் பாரிய சேதம் ஏற்படுகிறதென தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் குரங்கு தடுப்பு முகாம்கள் உலகில் பல நாடுகளில் குறிப்பாக மலேசியாவில் நடைமுறையில் உள்ளது.