NPP ஆட்சி ஜனநாயகத்திற்கு ஆபத்து; சந்திரிக்க விமர்சனம்

0
22

நாட்டின் தற்போதைய ஆட்சியின் போக்கு ‘ஜனநாயகத்திற்கு ஆபத்தானது’ என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை செயல்பாடுகள் குறித்து தமது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதி ஒதுக்கிய விவகாரத்தில் அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஒரு நேர்மையான மற்றும் தொழில்முறை அதிகாரி என சந்திரிக்கா குமாரத்துங்க தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட நீதி வழங்கப்படுவது நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்களுக்கு நிர்வாக அனுபவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர்களுக்கு அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் வீழ்ச்சியைத் தடுக்கும் பொறுப்பு இறுதியில் மக்களிடமே உள்ளது. எனவே நீண்ட கால விளைவுகளைப் புரிந்து கொண்டு ஜனநாயகத் தெரிவுகளைச் செய்யவும் முன்வருமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.