நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம்

0
31

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாளர் தொகுதி பிரதானியுமான சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்ன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பணியிடை நீக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்ன, கடந்த 2023 செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாளர் தொகுதி பிரதானியாக தனது கடமைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.