இந்தியரை மணந்த இலங்கை தமிழ் பெண்ணுக்காக மத்திய அரசு வரை சென்ற உச்ச நீதிமன்ற கோரிக்கை

0
34

2018 ஆம் ஆண்டு இந்திய பிரஜை ஒருவரை திருமணம் செய்த இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உச்ச நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியர் ஒருவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இலங்கையின் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இதன்போது, எதிர் பிரமாணப் பத்திரத்தில், அவர் ஒரு சட்டவிரோத குடியேறி என்பதால் அவரது வழக்கை பரிசீலிக்க முடியாது என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையையே சென்னை உச்ச நீதிமன்றத்தின் மதுரை கிளை மத்திய அரசிடம் மனிதாபிமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.