யாழில் சர்ச்சைக்குரிய விகாரை பெயர் பலகை அகற்றம்!

0
36

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடையில் கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் (8) அகற்றப்பட்டுள்ளது.

குறித்த இடத்தை ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என சபையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமைய விகாரை பெயர்ப்பலகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து வீதிகளில் “கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.

அதேவேளை அகற்றப்பட்ட பெயர்ப்பலகை காணப்பட்ட அதே இடத்தில், ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை விபரிக்கும் வகையிலான புதிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை ஒன்று மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்தப் புதிய பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சர்ச்சைக்குரிய விகாரை பெயர் பலகை அகற்றம்! | Jaffna Kadurugoda Vihara Board Removed