சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வருகை தருவோரின் கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்

0
40

சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வருகை தருவோரை கைது செய்யாமல் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் புதிய அதிகாரங்கள் அமலுக்கு வந்துள்ளன.

இதன் மூலம், இங்கிலாந்துக்கு சிறிய படகுகளில் குடியேறிகளை அழைத்து வரும் கடத்தல் கும்பல்கள் குறித்த முக்கிய தகவல்களை சேகரிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கென்ட் பகுதியில் உள்ள மான்ஸ்டன் புலம்பெயர்ந்தோர் செயலாக்க மையத்தில் இன்று திங்கள்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படும் சாதனங்களில் இருந்து உளவுத்துறை தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய தேவையான தொழில்நுட்ப வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.