எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேரிடர் தகவல் மையம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (10) காலை இந்த பேரிடர் தகவல் மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிராம சேவையாளர் பிரிவு மட்டத்திலிருந்து தகவல்களைச் சேகரிப்பதே இந்த பணியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் மூலம் இந்த தகவல் மையத்திற்கு நேரடியாக தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை வழங்குவதற்காக 0759 570 570, 0761 660 570, 0705 699 110 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் மையம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயற்படும் என்றும் மேலும் பெறப்பட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.



