இலங்கையில் இந்திய மருத்துவக் குழுவின் கள மருத்துவமனை

0
67

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர சுகாதார தேவைகளை ஆதரிப்பதற்காக கண்டியில் உள்ள மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவினால் ஒரு முழுமையான கள மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது.

இந்த கள மருத்துவமனைப் பிரிவு, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவ நிறுவப்பட்டுள்ளது. சிகிச்சை, சத்திரசிகிச்சை சேவைகள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. அதேவேளை இலங்கையில்  பேரிடர் மீட்பு பணியில் இந்தியா  பெரும் பங்களிப்பை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேரிடரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மஹியங்கனை மக்களுக்கு, அவசர மருத்துவ உதவிகளை நேரடியாக வழங்குவதற்கும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.