சாமானியனும் ஜனாதிபதி ஆகலாம் – ஜனாதிபதியும் சாமானியனாக மக்களுடன் சங்கமிக்கலாம்என்ற கருத்தை நிஜத்தில் நிரூபிக்கும் விதமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநயக்க சீரற்ற காலநிலையின் போது மக்களுக்கு உதவும் காட்சிகள் சமூக ஊடகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
தன் மக்களின் வலியை அறிந்த ஒரு தலைவர், மக்களின் துயரங்களைச் சுமந்து, அவர்களோடு ஒருவராகப் பயணிக்கத் தயாராக இருக்கும் அற்புதத்தை நாம் கனவில் அல்ல, நிஜத்தில் காண்கிறோம்.
இலங்கையின் 77 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை காணப்படாத ஒரு முக்கிய திருப்பம் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகையிரதங்களில் இனிப்பு விற்பனையாளராக சாதாரண வாழ்க்கையைத் தொடங்கிய ஒருவர், நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்துள்ளமை தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
மக்களின் பிரச்சினைகளை நேரடியாக உணர்ந்து கொண்ட வாழ்க்கைப் பின்னணி கொண்ட தலைவர் தேசிய பொறுப்பை ஏற்றிருப்பது, நாட்டின் எதிர்கால அரசியல் திசையில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கருத்துரைக்கின்றனர் என இப்பதவில் குறிப்பி



