கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன் அதன் செயல்திறன் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்புக்காகச் சிறப்பான டிஜிட்டல் தரவு முறைமை ஒன்றையும் கொண்டுள்ளது.
இலங்கையில் சுற்றுச்சூழல் தூய்மைக்கான இந்த முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று கொழும்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் டொக்டர் தம்மிக பெதபெண்டி தலைமையில் நடைபெற்றது.



