உலகின் காடுகளைப் பாதுகாக்க உலகத் தலைவர்கள் புதிய நிதி

0
32

உலகின் காடுகளைப் பாதுகாக்க உலகத் தலைவர்கள் புதிய நிதியை அறிவித்துள்ளனர். பிரேசிலின் அமஸான் பகுதியில் நடக்கும் COP30 பருவநிலை மாநாட்டில் அது அறிவிக்கப்பட்டது.

புதிய திட்டத்தின் கீழ் வெப்பமண்டல நாடுகள் மரங்களை வெட்டாமல் இருப்பதற்கு வெகுமதி வழங்கப்படும். அதற்காக 125 பில்லியன் டாலரைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்டத்துக்கு 5 பில்லியன் டாலர் அளிக்கச் சில நாடுகள் COP30 பருவநிலை மாநாட்டிலேயே உறுதியளித்தன. உலகின் ஆகப் பெரிய மழைக்காடுகளில் ஒன்றான கொங்கோ குடியரசின் மழைக்காட்டைப் பாதுகாக்கவும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பிரான்ஸும், மத்திய ஆப்பிரிக்க நாடான காபொனும் (Gabon) 2.5 பில்லியன் டாலர் திட்டத்தை முன்வைத்தன