மரபணுவின் வடிவத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் காலமானார்

0
33

மரபணுவின் வடிவத்தைக் கண்டுபிடித்த ஆய்வாளர் ஜேம்ஸ் வாட்சன் (James Watson) காலமானார். ஜேம்ஸ் வாட்சன் (James Watson) உயிரிழக்கையில் அவருக்கு வயது 97. வாட்சன் 1953இல் இன்னோர் ஆய்வாளர் ஃபிரான்சிஸ் கிரிக்குடன் (Francis Crick) சேர்ந்து மரபணுவின் வடிவத்தைக் கண்டுபித்தார்.  

நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால் உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வரமுடிந்தது. ஜேம்ஸ் வாட்சன் (James Watson), ஃபிரான்சிஸ் கிரிக் (Francis Crick) ஆகிய இருவருக்கும் 1962இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.