செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு தொடர்பு இல்லை – மறுக்கிறார் சமல்

0
19

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல்காரா்களுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பு இல்லை எனவும் அவர் மறுத்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வந்ததை பாராட்டுவதாகவும் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்தாருக்கு தொடர்புள்ளதாக சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். இது வேண்டும் என்று பரப்படும் பொய்யான தகவல் எனவும் ஆனால் இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்புகள் இல்லை என அவர் கூறினார்.

செவ்வந்தியுடன் தொடர்புள்ளதாக கூறப்படும் அரசியல்வாதிகளின் பெயர்கள் தனிநபர்களின் பெயர்கைளை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சமல் ராஜபக்ச தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல் தமது குடும்பத்துக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் சமல் ராஜபக்ச கூறினார்.