ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள கமலா ஹாரிஸ்

0
100

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். கமலா ஹாரிஸ் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்ததாவது,

“எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் ஜனாதிபதி நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம். ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் ட்ரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக இருந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.