பெண் வேடத்தில் தப்பி சென்ற ஒசாமா பின்லேடன்; காலம் கடந்து வெளியான தகவல்

0
23

2001 இல் செப்டம்பர் 11  அமெரிக்காவிற்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலையில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த அல்-கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன், அமெரிக்க இராணுவத்தில் ஊடுருவியிருந்த அல்-கொய்தா மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பெண் வேடத்தில் பாகிஸ்தானுக்குள் தப்பி சென்றதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.

பின்லேடன் சரணடைவதற்கு முன் பெண்களையும் குழந்தைகளையும் வெளியேற்ற விடியற்காலை வரை நேரம் கேட்டதாகவும், அதற்கு தளபதி ஃபிராங்க்ஸை அந்த மொழிபெயர்ப்பாளர் சம்மதிக்க வைத்ததாகவும் கிரியாகோ கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பின்லேடன் ஒரு பிக்கப் டிரக்கில் இரவில் தப்பிச் சென்றார். அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பார்வேஸ் முஷாரஃபிற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் உதவி அளித்ததன் மூலம் அவரை அமெரிக்கா விலைக்கு வாங்கியதாக கிரியாகோ குற்றம் சாட்டினார்.

இதனால் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது போல நடித்துக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தொடர முஷாரஃப் அனுமதித்தார்.

லஷ்கர்-இ-தைபாவிற்கும் அல்-கொய்தாவிற்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தபோதும் பாகிஸ்தானுடனான உறவு முக்கியம் என்பதால் அமெரிக்கா அதை பெரிதுபடுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.