நல்லூர் பிரதேச செயலகத்திற்கு இரு தேசிய விருதுகள்; ஜனாதிபதி பாராட்டு

0
25

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards – 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award ஐ பெற்றுக் கொண்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards – 2025 க்கான விருது வழங்கும் விழாவில் இந்த விருதை நல்லூர் பிரதேச சபை பெற்றுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (23) குறித்த விருது வழங்கும் விழா இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக இந்த விருதை வழங்கி வருகின்ற நிலையில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த சமூக வலைத்தளத்திற்கான Presidential Environmental Awards – 2025 இன் Social Media Category க்கு – அகில இலங்கை ரீதியாக நல்லூர் பிரதேச செயலகத்தின் Facebook ற்கு மட்டும் Special Jury Award கிடைக்கப்பெற்றது.

இவ் இரண்டு விருதுகளையும் பெற்றதையிட்டு நல்லூர் பிரதேச செயலக சமூகம் பெருமிதம் கொள்வதுடன் அதேவேளை பிரதேச செயலகம் மட்டுமே தேசிய ரீதியில் ஓரே தடவையில் முதற்தடவையாக இவ்விரு விருதுகளையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமன்றி பிரதேச செயலாளரும் அவரது குழுவும் ஜனாதிபதியை சந்தித்தபோது அவரால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைக்கப்பெற்றமை நல்லூர் பிரதேச செயலகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக பெருமை கொள்கின்றது என பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.