சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்க்கும் பெருமை சேர்ந்த்துள்ளார்.
சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்றது.
இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். இந்நிலையில் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.