சரத் பொன்சேகா (Sarath Fonseka) வசம் குரல் பதிவு இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
ராஜபக்சக்கள் மீதான பொன்சேகாவின் விவகாரம் மற்றும் காணொளி வெளியிடும் விவகாரம் என்பன தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் பொன்சேகாவின் இயல்பு அது. முன்னரும் அவர் அப்படித்தான்.
குரல் பதிவு இருந்தால் அதை அவர் வெளியிடட்டும். அதற்குரிய உரிமை அவருக்கு உள்ளது. கோட்டாபய ராஜபக்ச பொன்சேகாவுடன் நம்பி கதைத்திருகக்கூடும். ஆக அதை வெளியிட்டால் தற்போது பொன்சேகாவை நம்புபவர்கள் நிலை என்னவென்று சொல்வது?”- என்றார்.