அமெரிக்காவில் நடைபெற்ற (Olympia Amateur Las Vegas – 2025) உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய ஜகத் குணசேகர போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர (Olympia Amateur Las Vegas – 2025) போட்டியில் சீனியர் ஓபன் என்ற 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ள நெவாடா ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 28 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர குவைத்தில் உள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் உடற்கட்டமைப்பு பயிற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி இந்த போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
