இலங்கையின் அவசர நோயாளர் காவு வாகனங்களான சுவ செரிய சேவையின் பெயர் மற்றும் இலட்சினையையும் மாற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த குற்றச்சாட்டை இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது சுமத்தியுள்ளார். சுவ செரிய என்ற பெயரும் அதன் இலட்சினையும் மாற்றப்பட உள்ளன.
அத்துடன் அதன் கருப்பொருள் நிறமும் மாற்றப்பட உள்ளது. அதற்கு பதிலாக புதிய இலட்சினையில் தேசிய மக்கள் சக்தியின் நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இது முட்டாள்தனமாக நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர் இந்த திட்டத்தின் கர்த்தா என்ற வகையில் தாம் கடும் அதிருப்தியை கொண்டிருப்பதாக ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.