பதுளை பாடசாலையொன்றில் அமைச்சரவை அமைச்சரின் மகன் ஈ-சிகரெட்டை நான்கு மாணவர்களுடன் சேர்ந்து பயன்படுத்தியுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் முதலில் உங்களுடைய பிள்ளைகளை திருத்துங்கள், அதன் பின்னர் நாட்டு பிள்ளைகளை திருத்த பாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.