யாழ் ஆலயத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட குழந்தை!

0
25

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை ஆலயங்களுக்கு நேர்ந்து விற்று வாங்கும் பழக்கம் காலங்காலமாக நம்மவர்களிடையே வழக்கத்தில் உள்ளது. திருமணமாகியும் நீணட நட்கள் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இவ்வாறு நேர்ந்திக் கடன்களை வைப்பது வழமையாகும்.

குழந்தை பிறந்ததும் அதனை ஆலயத்தில் விற்று வாங்குவார்கள். பழங்கள், பொருட்கள், தென்னை, கமுகு மரங்களும் குழந்தை விற்று வாங்கும்போது ஆலயத்திற்கு அன்பளைப்பாக வழங்குவார்கள்.

இவ்வாறு குழந்தையை ஆலையத்தில் விற்று வாங்குவதனால் நோய்நொடியின்றி குழந்தை ஆரோக்கியமாகவும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழும் என்பது ஐதீகம். அந்தவகையில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள விக்ஷ்ணு ஆயங்களில் பிசித்தம் பெற்று விளங்கும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சப பெருவிழா அண்மையில் நடந்து முடிந்திருந்தது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சமுத்திர தீர்த்தம் வெகு பிரபலமானது.

எல்லா ஆலயங்களிலும் ஆலய திருவிழாவிலும் ஆலய கேணியில் தீர்த்தம் இடம்பெறுவது வழமை. ஆனால் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் மட்டுமே கடலுக்கு சென்று பெருமாள் தீர்த்தமாடுவது குறிப்பிடத்தக்கது.