மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி அனுர

0
25

அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சந்தித்து ஆசி பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றதோடு அவருடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் அஸ்கிரிய மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அஸ்கிரிய மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் நலம் குறித்து கேட்டறிந்ததோடு அவருடனும் உரையாடலில் ஈடுபட்டார்.