கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மற்றொரு துப்பாக்கி இன்று (03) ஊரகஸ் சந்தி பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
ஊரகஸ் சந்தி பொலிஸ் பிரிவில் உள்ள கிளை வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மைக்ரோ ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பெட்டி ஒன்றும் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் விசாரணைகளை நடத்தி வருகிறது.