இலங்கை தேயிலைக்கு நோபல் பரிசு? தவறை ஒப்புக்கொண்ட தொழில்துறை அமைச்சர்

0
20

ஜப்பானில் நடந்த ஏலத்தில் இலங்கை தேயிலைக்கு ஒரு கிலோகிராம் விலையை நிர்ணயித்த சாதனைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டதாக வெளியான அறிக்கை தவறு என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சாதனைக்கு பதிலாக தவறுதலாக தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர் அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றும் கூறினார். தனது சமூக ஊடகத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.