தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் 41 பேர் மரணிக்க யார் காரணம்?

0
26

தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சிந்திக்க வேண்டிய  ஒரு விடயம். தமிழ் மக்கள் மாத்திரமல்ல. சினிமா மோகம் கொண்ட எந்தவொரு இனமாக இருந்தாலும் இந்த செய்தியை எளிதில் கடந்து செல்லக் கூடாது.

இந்த மக்கள் கூட்டம் வெறுமனே அரசியல்வாதி விஜயை பார்க்க கூடிய கூட்டமல்ல. சினிமாவின் உச்ச பிரபல்யமாக இருக்கும் ஒரு நடிகரை வெறித்தனமாக நேசிக்கும் கூட்டம். இடையில், ஆர்வத்தில் பொது மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மனித குலம் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. செவ்வாயில் விவசாயம் செய்வது பற்றி சீனா ஆராய்ச்சிகளை நடத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சினிமா மோத்தில் இருக்கின்றனர். அதிலும் 30 வயதுக்கும் குறைந்த இளைஞர்களில் 80 சதவீதம் வரை ஏதோ ஒரு நடிகரின் ரசிகனாக இருக்கின்றனர்.

இந்த மனபோக்கின் எதிரொளிதான் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவம். விஜயின் கொள்கைகளை கேட்கவோ அல்லது அவரது அரசியல் பற்றி பேசவோ அன்றி அவரை பார்க்க வந்தவர்களே பெரும்பான்மையானவர்கள் என தமிழக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் விஜய் ஓர் அரசியல்வாதியாக தகுதியற்றவர்கள். அவர் ஓர் ரசிக போதையில் உள்ளவர். அவது செயல்பாடுகளை அவதானித்தால் மாஸ்காட்ட வேண்டுமென்ற நிலையில்தான் கூட்டங்களை நடத்துகிறார்.

தமிழ்நாட்டின் உண்மையான அரசியலை அவர் பேசுவதும் இல்லை. மேலோட்டமாக பேசிவிட்டு அனைத்து தரப்புகளையும் பெற்று முதல்வர் கதிரையில் அமர பார்க்கிறார்.

தமிழக மக்களுக்காக அவர் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்? தமிழக மக்களுக்காக அவர் பேசிய அரசியல்தான் என்ன? ஆனால் தமிழகத்தின் சினிமா கலாசாரத்தை நன்கு உணர்ந்து தமது ரசிகர் மன்றத்தை மாத்திரம் கட்டமைத்துள்ளார்.

ஒரு நடிகனை பார்த்துவிட வேண்டுமென்ற மனநிலையில் தமிழக இளைஞர்கள் உள்ளனர். அதற்காக எதையும் செய்ய துணிக்கின்றனர். அதனை விஜய் சரியாக உணர்ந்து சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்.

இந்தியாவில் தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. ஆனால் சினிமா என்ற மோகத்தில் ஊறியுள்ளது. சினிமா சோறு போடாது என்பதை உணர மறுக்கின்றனர் தமிழக இளைஞர்கள். சினிமாவை நேசிப்பது வேறு அதில் வெறித்தனமாக ஊறிபோவது வேறு. சினிமா என்பது வெறும் பொழுபோக்கு. சீன மற்றும் ஈரானிய படங்கள் போன்று மனித சிந்தனையை வளர்க்கும் படங்களில் தமிழகத்தில் வெகு சிலவே வருகின்றன.

ஒன்றுக்கும் உதவாத மசாலா படங்களே பெருமளவில் வெளிவருகின்றன. இந்த விபத்துக்கு தமிழகத்தின் ஆளுங்கட்சியாக திமுக மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதில் சில உண்மைகள் இருக்கலாம். ஆட்சியை தக்கவைக்க அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் எதை வேண்டுமானாலும் செய்யும். இலங்கையில்கூட பல வரலாறுகள் அதற்கு உதாரணமாக உள்ளன.

ஆனால் இங்கு மக்கள் சிந்திக்க வேண்டும். இத்தகைய பாரிய கூட்ட நெரிசலுக்கு தமது குழந்தைகளுடன் செல்கின்றனர். ஓர் அறிவார்ந்த சமூகம் அவ்வாறு செய்யுமா?

இரண்டு வயது குழந்தையை ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். 9, 10 வயது என சிறுவர்களை அழைத்து வந்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு மூச்செடுக்க முடியாது என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாதவர்களா இந்த சினிமா வெறியர்கள்.

நடிகரை பார்ப்பதில் அப்படி என்ன ஆனந்தம் அவர்களுக்கு கிடைக்கிறது எனத் தெரியவில்லை. அதன் விளைவு இன்று பிள்ளைகளை, தாயை, தந்தையை, சகோதரர்களை, உறவுகளை இழந்து வாடுகின்றனர். விஜய் அவர்களது உயிர்களை மீட்டு தருவாரா?

இந்த விடயத்தில் முதல் குற்றவாளி அங்கு சென்ற மக்கள்தான். அதற்கு ஏமாற்றால் போல் ஊடகக் கலாசாரம் வேற. கூட்டம் அதிகமாகிறது என்றால் தமது பாதுகாப்பு கருதி குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் வெளியேறிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ விஜயை பார்க்கும் மோகத்தில் இருந்தனர். குழந்தையின் உயிர் அவர்களுக்கு முக்கியமாக தெரிந்திருக்கவில்லை.

எனவே, இந்த விடயத்தில் எவரையும் குற்றம்சாட்டுவதில் அர்த்தம் இல்லை. அரசாங்கம் 10ஆயிரம் பொலிஸாரை பாதுகாப்பில் நிறுத்தினாலும், இவ்வாறான நெரிசல் ஏற்பட்டால் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி முதலில் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ளவே முற்படுவார். அவர் கூட்ட நெரிசலுக்குள் செல்ல மாட்டார்.

எனவே சினிமா மோகத்தில் திரியும் தமிழக மக்களுக்கும் இந்தச் சம்பவம் ஓர் பாடம். உயிர்கள் விலைமதிப்பற்றது. அதனை மீண்டும் பெற முடியாது என்பதையே அவர்கள் உணர வேண்டும்.