நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று (29) காலை வந்திருந்த நிலையில் அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்றிருந்த போராட்டத்தில் கலந்து கொண்ட போது வாகனத்தை நிறுத்துவது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இதன்போது போக்குவரத்து பொலிஸார் ஒருவரை முட்டாள் என அர்ச்சுனா எம்.பி திட்டியிருந்தார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.