2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்துக் கலந்துரையாடும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.