அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து; பயணிகளின் நிலை என்ன?

0
37

இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் இரண்டு பூகொடை – தொம்பே வீதியில் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன. தனியார் பயணிகள் பேரூந்துகள் இரண்டும் தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு விபத்தில் சிக்கிய பேரூந்துகளின் முன்பக்கங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. எனினும் பேருந்துகளில் பயணித்த பயணிகளின் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.