70 மில்லியன் ரூபா பண மோசடி; நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

0
67

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான “கிரிஷ்“ வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு அறிக்கையை டிசம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பதிவாளரிடம் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ இலங்கையில் ரக்பியை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயினை பெற்று பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக சட்டமா அதிபர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

வழக்கை பரிசீலனை செய்த நீதவான், இந்த வழக்கு டிசம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து வழக்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.