நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் ஒழுங்கு பிரச்சினையையாக பாராளுமன்ற பொதுக்கழிப்பறை கழிப்பறை பூட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாடாளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை 4:30 மணிக்கு மூடப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏன் என்று கேள்வி கேட்டால், கழிப்பறையில் உள்ள உபகரணங்களை கழற்றி எடுத்துச் சொல்லப்படுவதால் தான் அதை மூடுவதாக கூறுகின்றாரகள்.
இதனால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றது. எனவே இரவில் கூட பொது கழிப்பறையை திறந்து வைக்கச் சொல்ல சொல்லுங்கள்” என்று அர்ச்சுனா எம்.பி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.