இலங்கையில் அக்டோபர் முதல் மெட்ரோ பேருந்து!

0
29

ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் இலங்கை போக்குவரத்து சபைக்கு முழுமையாக சொந்தமான நிறுவனமாக நிறுவப்படும் என்றும் ஆனால் அதன் செயல்பாடுகள் தனியார் துறையின் செயல்பாடுகளைப் போலவே இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

அதேவேளை நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஜனவரி 1, 2026 முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பழைய லேலண்ட் மற்றும் டாடா பேருந்துகளில் சீட் பெல்ட்கள் பொருத்தப்படாததால் புதிய சீட் பெல்ட்டைத் தயாரிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையில் தொழில்நுட்பத் துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.