முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (19) தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
இன்று மதியம் தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு தனது மனைவியுடன் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட நேரம் உரையாடினார்.
இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடல், குடும்ப விவகாரங்கள் குறித்தும் மேலும், தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் சில விவாதங்கள் நடந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவுடன் மதிய உணவையும் உண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு கோட்டாபய ராஜபக்ஷ கொழும்புக்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.