நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம்; சோகத்தில் திரையுலகம்

0
36

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்றிரவு உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

46 வயதான ரோபோ சங்கர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்த ரோபோ சங்கர், விஜய், அஜித், தனுக்ஷ், ரஜனி, சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கு நடிகர் தனுக்ஷ் உட்பட முன்னனி நடிகர்கள் பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.