கண்டி நாத தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே எ. டபிள்யூ. எஸ். பண்டாரநாயக்க கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (15) முறைப்பாடு அளித்துள்ளார்.
பஸ்நாயக்க நிலமே எ. டபிள்யூ. எஸ். பண்டாரநாயக்க ஊடகங்களுக்க கருத்த தெரிவிக்கையில், நான் கண்டி தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமே பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன்.
தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமே பதவிக்கு விண்ணப்பித்ததை அறிவித்ததிலிருந்து நாளில் இருந்து பலர் எனக்கு தொந்தரவுகள் கொடுக்கின்றனர். இதனால் நான் இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளேன் என தெரிவித்தார்.