மகிந்தவின் நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

0
29

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகி சஷீந்திர ராஜபக்ஷ தூக்கத்தின் போது கடுமையான மூச்சுத்திணறல் பிரச்சினை அனுபவிப்பதாகவும் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 35 முறை சுவாசக் கடினம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனால் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் வலியுறுத்தினார். இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவரை சிகிச்சை பெறும் வகையில் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், பிணை வழங்கப்பட முடியாது என்று தீர்மானித்தது. இதன்படி சஷீந்திர ராஜபக்ஷவை வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வெளியானதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் சஷீந்திர ராஜபக்ஷ ஆதரவாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே பெரும் பரபரப்பு நிலவியமை குறிப்பிடத்தக்கது.